Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தலைநகரம் 2 திரை விமர்சனம்

தலைநகரம் 2 திரை விமர்சனம்

Posted on June 23, 2023

வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் என பலரும் நடித்துள்ள “தலைநகரம் 2 “. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார். இது சுந்தர்.சி க்கு திரைஉலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் “தலைநகரம் 2”

“தலைநகரம் 2” திரைப்படத்தில் ரைட் என்னும் கேரக்டரில் மிகப்பெரிய ரவுடியாக நடித்திருக்கும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் (போஸ் வெங்கட்) மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ முடிவெடுக்கிறார் “ரைட்|” . அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள 2ஆம் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள்கிறார். மறுபக்கம் வடசென்னை (ஜெய்ஸ் ஜோஸ்), மத்திய சென்னை (விஷால் ராஜன்), தென் சென்னை (பிரபாகர்) பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவுகிறது.

இதில் மத்திய சென்னை ரவுடி “விஷால் ராஜன்” உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை “பாலக் லால்வானி” கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அவரை கடத்தியது தொடர்பாக விஷால் ராஜனும், தம்பி ராமையாவுடனான பிரச்சினையில் ஜெய்ஸ் ஜோஸூம், யதேச்சையாக ஒரு பிரச்சினையில் பிரபாகரும் சீண்டிப் பார்க்க சுந்தர்.சி மீண்டும் ‘ரவுடி ரைட்’ ஆக மாறுகிறார். இதன்பின்னர் இவர்கள் 4 பேரின் நிலைமை என்ன ஆனது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது “தலைநகரம் 2 “.

தலைநகரம் ௨ படத்தில் நடித்துள்ளவர்களில் (ரைட் ரவுடி ) சுந்தர்.சி திரையில் ரவுடி ரைட் வாழ்ந்துள்ளார் மற்றும் அனைவரும் தங்களுடைய கேரக்டர்களை குறைவில்லாமல் திரையில் ரசிக்கும்படியாக உள்ளது . ஆக்‌ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார். ரிட்டையர்ட் ரவுடியின் கேரக்டரை அசால்டாக செய்து ரைட் ரவுடியாக திரையில் ரசிக்கவைத்துள்ளார் “சுந்தர்.சி” தலைநகரம் 2 வில் பழிவாங்கும் காட்சிகளை அப்படியே கொடூரமாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம். .

இயக்குனர் வி.இசட்.துரைக்கு “தலைநகரம் 2 ” படத்தின் மூலம் தன்னால் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜை கொடுத்துள்ளார். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உதவியுள்ளது.

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme