Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ருத்ரன் விமர்சனம்!

ருத்ரன் விமர்சனம்!

Posted on April 21, 2023

போக்குவரத்து நிறுவனம் நடத்தும் அப்பா (நாசர்), குடும்பப் பொறுப்பைக் கவனித்துக்கொள்ளும் அம்மாவின் (பூர்ணிமா பாக்யராஜ்) செல்லப் பிள்ளை ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). அவருக்கு மருத்துவமனையில் பணியாற்றும் அனன்யா (பிரியா பவானி சங்கர்) மீது காதல். இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்த வாங்கிய ரூ.6 கோடியுடன், அப்பாவின் நண்பர் தலைமறைவாக, அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கிறார் அப்பா. அந்தக் கடனைஅடைக்க வெளிநாடு செல்கிறார், ருத்ரன்.

எமோஷன், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், அம்மா சென்டிமென்ட் என எல்லாம் இருக்கும் கமர்ஷியல் ஹீரோவாக ராகவா லாரன்ஸ். வழக்கம் போல எல்லாவற்றிலும் நன்றாகவே நடித்து இருக்கிறார். என்ன ஆக்ஷனில் மட்டும் ஓவர் டோஸ்.

பிரியா பவானி ஷங்கரின் காதலும், எமோஷனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ். சென்டிமென்ட் பகுதிக்கு கனகச்சி தமான தேர்வு. லாரன்ஸ் மற்றும் அவருக்கு இடையேயான காட்சிகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.

மகள் சென்டிமென்ட் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நண்பனாக காளி வெங்கட் வெளிப்படுத்தி நடிப்பு இருக்கும் ரெகுலர் ஃப்ரண்டுக்கான நடிப்பு. வில்லன் சரத்குமார் நடிப்பு மிரட்டல். ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கதிரேசன் படத்தின் காட்சிகளை நன்றாகவே எதிர்கொண்டு இருக்கிறார். ஜிவி இசை ஓகே ரகம். ஃபேமிலியோடு பார்க்கலாம்.

  • Prashanth Fertility Launches ‘Prashanth Fertility at Home’ to Strengthen Continuity of IVF Care and Support Better Treatment Outcomes
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme