Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
செங்களம் (இணைய தொடர்) -indiastarsnow.com

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் விமர்சனம்

Posted on March 25, 2023

செங்களம் இணையத் தொடர்

வாணி போஜன் கலையரசன் டேனிபோப்
விஜிசந்திரசேகர்
சரத் லோகிதாஸ்
வேலராமமூர்த்தி பவன்
லகுபரன் மற்றும் பலர்
இசை: தரண்குமார்
இயக்கம்: S.R.பிரபாகரன்

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ஜி5 (ZEE5) ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக “செங்களம்” இணையத் தொடர். அபி அண்ட் அபி என்டர் டெயின்மென்ட் ( Abi & Abi Entertainment PVT LTD) சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்ன ணியில் நடைபெறும் ஒரு அரசியல் ல்திரில்லராக உருவாகியுள்ளது.

நகராட்சி தலைவர் பதவி மற்றும் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் ஆகியவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு குடும்பத்தின் முழு நேர அரசியல் விளையாட்டை…, அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விருதுநகர் நகராட்சியை மீட்கவும், குடும்ப அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆளும் கட்சி உதவியுடன் தனி நபராக நாச்சியார் எனும் கதாபாத்திரம் முயற்சிக்கிறது.
‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை’, ‘அரசியல் மூலமாக கிடைக்கும் அதிகார போதை எதையும் செய்ய துணியும்’ என்ற இரு விடயங்களை மையப்படுத்தி இந்த ஒன்பது அத்தியாயங்கள் வரையிலான இணைய தொடராக நீண்டிருக்கிறது.

சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது.

ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார் என அடுத்தடுத்து பல திருப்பங்களை கொண்டத்துதான் இந்த செங்களம்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பது போல்…, அரசியலில் ஒரு பெண்மணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவரின் பின்னணியில் ரத்த உறவுள்ள ஆண்கள் இருக்க வேண்டும் என்று காட்சிப்படுத்தி இருப்பது ஆண்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சூரியகலா ராஜமாணிக்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜனின் நடிப்பை விட, நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலியின் நடிப்பு நிறைவைத் தருகிறது. சூரியகலா- நாச்சியார் இருவரும் தோழிகள். இதில் நாச்சியாரின் சகோதரரான ராயர், சூரியகலாவை காதலிக்கிறார் இன்று காட்சிப்படுத்தி இருப்பது… சூரிய கலாவை அரசியல் சதி செய்து கொன்றவர்களை ராயர் பழி வாங்குவதற்கான ஒரு உத்வேக புள்ளியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த கதையினை இயக்குனர் SR. பிரபாகரன் இயக்கியுள்ளார்.

9 எபிசோடுகளை கொண்ட இந்த செங்கலம் ZEE5 OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • From The World of ‘Yaathisai’ To The Battlefields of 1944! Filmmaker Dharani Rasendran’s ‘Death Railway’ First Look and Glimpse Unveil A Visually Stunning Period World!
  • யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!
  • A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme