Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கோஸ்டி விமர்சனம்

கோஸ்டி விமர்சனம்

Posted on March 18, 2023

‘கோஸ்டி’ திரைப்படம் இன்று (மார்ச் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார்..

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் கே.எஸ்.ரவிக்குமார் தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டத்தை முறியடித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார். இதற்கிடையே காஜல் அகர்வால் வீட்டில் பேய்கள் புகுந்து பயமுறுத்த அதனிடம் இருந்து தப்பிப்பதற்கு சாமியார்களின் உதவியை நாடுகிறார் காஜல் அகர்வால் .

ஒரு பக்கம் பேய் தொல்லை, மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு கோஸ்டிகளிடமும் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடியாக சொல்வதே ‘கோஸ்டி’ படத்தின் கதை.

சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஜெய் , நடிகை ராதிகா நடித்திருக்கிறார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி, , ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் என அனைவரும் அவர் அவர் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, சாம்.சி.எஸ்-இன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக இருந்தாலும், இந்த கதைக்கு இது போதும் என்றே தோன்ற வைக்கிறது.

  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme