Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கப்ஜா விமர்சனம்

கப்ஜா விமர்சனம்

Posted on March 18, 2023

கன்னட மொழியில் பிரம்மாண்டமாக, உருவாகியுள்ளது “கப்ஜா” திரைப்படம். தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்து இன்று (மார்ச் 17- 2023) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

உபேந்திரா ஒன் மேன் ஆர்மியாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் கப்ஜா படத்தில் கிச்சா சுதீப்பின் கேமியோ காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, சிவராஜ்குமாரின் மிரட்டல் என்ட்ரி இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வண்ணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவில் உருவாகியுள்ளது “கப்ஜா” திரைப்படம், இவர்களுடன் படத்தில் ஸ்ரேயா சரண், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரவி பஸ்சூர் இசையமைத்திருக்கிறார்.

கப்ஜா கதையானது 1945 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கி, பின்னர் 1971 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா விமான படையில் பயிற்சி முடித்து விட்டு பணிக்கு செல்வதற்கு முன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வாழும் அமராபுரம் தொடங்கி பல இடங்களிலும் சுதந்திர போராட்டத்திற்கு பின் பகதூர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

பகதூர் சாம்ராஜ்யத்துக்கு அமராபுரம் தொகுதியில் கலீல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறான். தேர்தலில் கலீல் மகனை களம் இறக்க திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக உபேந்திரா அண்ணனால் (போசனை கிருஷ்ணா முரளி) கலீல் மகன் கொல்லப்பகிறான். இதனால் ஆவேசமடையும் கலீல் பழிக்கு பழியாக உபேந்திரா அண்ணனை கொல்கிறான். தன் அண்ணன் மரணத்திற்கு பழி தீர்க்க களம் இறங்கும் சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா எப்படி கேங்ஸ்டர் கிங் ஆக மாறுகிறார் என்பதே கப்ஜா.
கப்ஜாவில் ஒளிப்பதிவு மிக நன்றாக உள்ளது, கடந்த காலத்தை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
  • திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme