Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மெமரீஸ் விமர்சனம்

Posted on March 11, 2023

8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி. இவர் ஹீரோவாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷின் இசையில் படம் உருவாகியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது.ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார். இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?”

மெமரீஸ் படத்தில் ஹீராேவிற்கு மட்டுமல்ல, அவரை சுற்றி வரும் கதாப்பாத்திரங்களுக்கும் டபுள் ரோல்தான். மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், அவரின் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது. இப்போது வெளிவரும் பல டைம்-ட்ராவல், சைக்காலஜி த்ரில்லர் படங்களில் கதைக்குள் கதை வைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அப்படி படத்திற்குள்ளே சொருகப்படும் கதைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. இப்படத்தில் அந்த எல்லையை மீறி உள்ளனர். முதலில் ஏதோவொரு இயல்பான இளைஞராக காட்டப்படும் ஹீரோ வெற்றி, பிறகு தனது நினைவுகளை இழந்து விட்டு கொலைகாரனா? நல்லவனா? என்று தெரியாமல் விழி பிதுங்கும் மனிதனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு வைக்கப்படும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராததுதான். ஆனால் அதையடுத்து “சர்ப்ரைஸ் ட்விஸ்ட்” எனும் பெயரில் எதையோ வைத்து, முடிக்க தெரியாத ஒரு நல்ல கதையை ஏனாே தானோ என முடித்துள்ளனர். இதை சிக்கலான கதை என கூறுவதை விட, மிகவும் குழப்பமான கதை என கூறுவதே லாஜிக்காக இருக்கும்.

  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme