Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
nternational Women's Day was celebrated by GEO India Foundation.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் 15 க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Posted on March 9, 2023

மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் ஒண்டர் உமன் விருதுகள் வழங்கும் விழா சென்னை சவேரா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் இனியா, வடிவுக்காரசி மற்றும் சாரதா ரமணி, நீனா ரெட்டி, சிந்து வினோத்குமார், பினா போயஸ், தாரணி கோமல், தேவி கிருஷ்ணா, முனைவர் மாயலக்ஷ்மி, முனைவர் கிரேசி, மரு. சவுமியா ரமணி, மரு.டாஸ்மியா பாப்பா, ப்ரார்ஹிபா யுவராஜ், உள்ளிட்ட 15 பேருக்கு சிறந்த பெண் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இருளர் இன பெண் மணியான சொர்ணலதாவும், பழங்குடி இனத்தை சேர்ந்த ஆசிரியர் சித்ராவும் சிறந்த பெண் ஆளுமைகளுக்கான விருதைப்பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் பழங்குடி பெண்கள் வளர்ச்சிக்காக க்ளோபலிங் டபிள்யூ.டபிள்யூ நிறுவனம் வழங்க ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் பிரியா ஜெமீமா பெற்றுக்கொண்டார்.

விருது பெற்றவர்கள் அனைவருமே சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் என்றும் கிராமப்புற பெண்களின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ஊக்கமளிக்க இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் ப்ரியா ஜெமீமா தெரிவித்துள்ளார்.

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme