Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
’அரியவன்’ திரை விமர்சனம்-indiastarsnow.com

’அரியவன்’ திரை விமர்சனம்

Posted on March 3, 2023

கபடி வீரராக வரும் ஹீரோவுக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளரும் நாயகி பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. வில்லனாக வரும் டேனியல் பாலாஜி சில இளைஞர்களுடன் சேர்ந்து இளம்பெண்களுக்கு காதல் வலை விரித்து அவர்களை தவறாக வீடியோ எடுக்கின்றனர். இதனை வைத்து மிரட்டி சில பிரபலங்களுக்கு அந்த இளம்பெண்களை சப்ளை செய்கின்றனர்.

இந்த கும்பலிடம் நாயகி பிரணாலியின் தோழியும் சிக்கி தற்கொலைக்கு முயல்கிறார். தோழிக்காக தனது காதலனிடம் உதவியின் நாடுகிறார் நாயகி. அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களை வில்லன் கும்பல்களிடமிருந்து காப்பாற்றும் ஹீரோ, காதலின் பெயரில் ஏமாற்றியவன் கையையும் வெட்டுகிறார்.

இதனால் கோபமடையும் வில்லன் டேனியல் பாலாஜி ஹீரோவை பழிவாங்க துடிக்கிறார். அதன்பின்னர் நடக்கும் சம்பவங்களே ‘அரியவன்’ படத்தின் கதை. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக இளம்பெண்கள் எவ்வாறு காதலின் பெயரில் சில கயவர்களின் கைகளில் சிக்குகிறார்கள் என்பதை படமாக எடுத்து வருகிறது. அந்த வரிசையில் ‘அரியவன்’ படமும் இணைந்துள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் பிரனாலி குடும்ப பாங்கான முகத்தோடும், அளவான நடிப்போடும் கவர்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி, வழக்கம் போல் தனது அதிரடியான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சில இடங்களில் சற்று ஓவராக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தாலும், தனது நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.சத்யன், கல்கி, சூப்பர் குட் சுப்பிரமணி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது

  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
  • புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!
  • The Script That Left Screenplay Maestro K. Bhagyaraj Impressed — What Lies Beneath ‘Beep’ Ahead of Its September 18 Release?
  • திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் ‘பீப்’ பட ரகசியங்கள் என்ன ?
  • கோவை, Get Ready! தமிழ் ஐடல் உங்கள் நகரத்திற்கு வருகிறது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme