Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - திரைவிமர்சனம்!

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

Posted on February 27, 2023

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா தனது கலகலப்பான பேச்சாளும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது சிங்கிள் பசங்க காதலிப்பதற்காக பிரத்யேகமாக போனில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்னை விஞ்ஞான வளர்ச்சியில் பல கோடி ரூபாய் செலவில் ஷாரா AI தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கிறார். இந்த கண்டுபிடிப்புக்காக பக்ஸ், பல கோடி பணத்தை ஷாராவுக்காக செலவு செய்கிறார். போனில் பேசுவதற்காகவும் சிங்கிள் பசங்களின் தேவைகளை தீர்த்து வைப்பதற்காகவும் பல நாட்கள் செலவு செய்து பிறகு சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்ற ஒரு பெண்ணை போனில் வடிவமைக்கிறார்.

ஷாரா வடிவமைத்த சிம்ரன் போனை வெளியே கொண்டு செல்ல அப்போது இருவர் அந்த போனை திருடி சென்று விடுகின்றனர். பிறகு அந்த போனை ஒரு விலைக்கு கடையில் விற்றுவிடுகின்றனர். இதனிடையே இன்ஜினியரிங் படித்துவிட்டு டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவ்வப்போது அவருடைய நண்பர் மா.கா.பா.ஆனந்த்திடம் தேவைகளுக்காக பணம் பெறுகிறார். ஒருநாள் இவருடைய மொபைல் போன் உடைந்து போக அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு மொபைல் வாங்க செல்கிறார் சிவா. மலிய விலையில் சிவா போன் கேக்க இவரிடம் அந்த சிம்ரன் போனை கடைக்காரர் விற்றுவிடுகிறார். ஒருபுறம் தொலைந்த சிம்ரன் போனை ஷாராவும், பக்ஸ் குழுவும் தேடுகின்றனர்.
பிறகு சிவா விரும்பும் பெண்ணையும் டெக்னாலஜியை வைத்து சிம்ரன் சேர்த்து வைக்கிறார். அந்த பெண்னை காதலிக்க தொடங்கிய பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை சிவா குறைக்கிறார். இதனால் கோபமடையும் சிம்ரன், சிவாவுக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் பல பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சிவா இதிலிருந்து எப்படி மீள்கிறார்? தொலைந்த சிம்ரன் போனை கண்டுபிடித்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிவா மற்றும் மேகா ஆகாஷ் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. சாப்ட்வேரை பயன்படுத்தி சிவா செய்யும் ரகளைகள் மற்றும் குறும்புகள் கைதட்டல்களை பெறுகின்றன. ட்ரோன் மூலம் உணவு டெலிவரி, லக்ஸரி காரில் உணவு டெலிவரி என காட்சிக்கு காட்சி அசத்தி உள்ளார். சிவாவின் அப்பாவாக மனோ தனது நடிப்பின் மூலம் சிரிப்பு வர வைக்கிறார். அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக கைண்டு உள்ளார். தற்போது வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் நம்மை ஆட்சி செய்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை காமெடி கலந்த திரைக்கதையில் எடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ஷா.

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme