Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ரன் பேபி ரன் திரை விமர்சனம்-Iindiastarsnow.com

ரன் பேபி ரன் திரை விமர்சனம்

Posted on February 4, 2023

செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிவரும் ஆர்.ஜே பாலாஜிக்கும், இஷா தல்வாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு பிரச்னை காரணமாக பாலாஜியின் காரில் வந்து ஒளிந்துகொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னைச் சிலர் துரத்துவதாகவும், தன் உயிருக்கே ஆபத்திருப்பதாகவும் கூறி அவர் பாலாஜியிடம் உதவி கேட்கிறார். முதலில் தயங்கும் பாலாஜி, பின்னர் ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்ய, அது அவருக்கே ஏகப்பட்ட சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலிருந்து எல்லாம் பாலாஜி மீண்டாரா, ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பின்னாலிருக்கும் மர்மம் என்ன என்பதைப் நாவல் படிக்கும் உணர்வை அப்படியே திரையில் தந்திருரக்கிறார் மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்.

தொடக்கத்தில் இருந்து பாலாஜியின் பார்வையிலேயே பயணிக்கிறது. ரன் பேபி ரன் திரைக்கதை தன்னை ஒரு சாமானியன் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பாலாஜி, இரண்டாம் பாதியில் மட்டும் எப்படி புலனாய்வு புலியாகிறார், காவல்துறை ஏன் இவ்வளவு சுமாரான ஐடியாக்களை மட்டுமே யோசிக்கிறது, ஒரு காவலரை ஒரே நாளில் பணி மாற்றம் செய்யும் அளவுக்குப் பலம் பொருந்திய வில்லன் க்ரூப், ஏன் சாதாரண பாலாஜியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது எனப் படம் முழுவதுமே கேள்விகள் எழுந்தவாறு உள்ளன.

கிருஸ்துவ பதறால் வளர்க்கப்படும் இருண்டு மருத்துவ கல்லுரி பெண்கள் இறக்கின்றனர் அவர்களின் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பெரியளவிலான ஒரு குற்றப்பின்னணியை இறுதிக்காட்சியில் முன்வைக்கிறது திரைபட குழு ஆனால், அக்காட்சிகளுக்கு இருக்க வேண்டிய ஆழமும் நம்பகத்தன்மையும் இல்லாமல்போகிறது . ரன் பேபி ரன் திரைபடதின் யார் குற்றவாளி என்ற ட்விஸ்ட் தெரியவந்ததும் அதுவரை இருந்த லாஜிக் ஓட்டைகள் அப்படியே இரு மடங்காகின்றன.

படதின் மிகப் பெரிய பலமாக சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை. முக்கியமான காட்சிகள் சுமாராக எழுதப்பட்டிருந்தாலும் அவர்தான் தன் இசையால் படத்தை நிமிர வைக்கிறார். இரவு நேரக் காட்சிகளை எஸ்.யுவா, தன் ஒளிப்பதிவால் மெருகேற்றியிருக்கிறார்.

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme