Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
actor-varisu-movie-review-indiastarsnow.com

வாரிசு திரை விமர்சனம்

Posted on January 13, 2023

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன் ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால் முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால் (பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும் சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி விஜய்க்கு வந்ததா, இல்லையா? என்பது கதை.

பார்த்துப் பழகிய கதைதான். அதை பெரும் தொழிலதிபர் கூட்டுக் குடும்பத்தில் நுழைத்தது, அம்மா – அப்பா – அண்ணன் – அண்ணி – அவர்கள் குழந்தைகள் என சென்டிமென்டாக மாற்றியதும் திரையில் நடக்கும் சம்பவங்கள், திரையரங்கில் இருக்கும் ரசிகர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தில் கனெகட் செய்ய வேண்டும். ஆனால் அங்கு ஏதோ நடக்கிறது, அதை நாம் பார்த்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை சில இடங்களில் கொடுத்துவிடுகிறது. அத்துடன் படத்தின் கதைகளம் மிகபெரிய பணக்காரரின் வீடு என்பதால், அது எளிய ரசிகனுக்கு ஒரு அந்நிய எண்ணத்தை கொடுக்கலாம்.

தமன் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக உதவவில்லை. ரஞ்சிதமே பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் வைக்க வேண்டுமே என்று திணித்ததுபோல் உள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு முந்தைய காட்சியும், அடுத்த காட்சியும் சோகமாக உள்ளது. ஆனால் பாடலுக்கு மட்டும் அதுவரை வராத ஹீரோயின் விஜய்யுடன் நடனமாடுகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கான காட்சிகள் மிக மிக குறைவு. வழக்கமான விஜய் படங்கள் போல நடனமாட மட்டுமே நாயகியாக வருகிறார். இதில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லனுக்கும் நாயகனுக்குமான போட்டியே இல்லை. அதனால் படத்தில் சுவாரஸ்யம் குறைகிறது. மேலும் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. ஆனால் அவை முழுமைபெறவில்லை. அவசரத்தில் உருவாக்கியதுபோன்ற உணர்வை கொடுக்கிறது.

actor-varisu-movie-review-indiastarsnow.com
actor-varisu-movie-review-indiastarsnow.com

  • தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
  • FROM SAVING UP FOR ₹1 ADHIRASAM TO JUDGING FESTIVE FAVOURITES: SAMANTHA RUTH PRABHU RECALLS A SWEET CHILDHOOD MEMORY ON CELEBRITY MASTERCHEF TAMIL
  • ₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்
  • ‘JADA’ FAME DIRECTOR KUMARAN RETURNS WITH ‘IRUVAR’, A SOULFUL MUSICAL PRODUCED BY STONEBROOK FILMS
  • ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme