Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மாறன் திரைவிமர்சனம்

மாறன் திரைவிமர்சனம்

Posted on March 12, 2022

இன்றைய சமூகத்தில் நேர்மையான மனிதர்க்கு நடுங்கும் அநீதியை சொல்லும் படம் தான் இந்த மாறன்.
நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி, பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதே சமயத்தில் பிரசவத்தின் போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார்.

தமிழ் சினிமாவில் வருவதை போல் அம்மா, அப்பாவாக இருந்து தங்கையை வளர்க்கிறார் ஹீரோவான மாறன் கேரக்டரில் நடித்துள்ள தனுஷ். தனுஷின் இன்ட்ரோ சீனே பாரில் ரவுடிகளுடன் சண்டை, போதையில் போலீசிடம் சிக்கி, ஹீரோயின் மாளவிகா வந்து மீட்டு செல்வது தான். பழைய சினிமாக்களில் வருவதை போல் தீ பார்த்து டென்ஷனாகி, மயங்கி விழுகிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது.

ராம்கி போலவே நேர்மையான பத்திரிக்கையாளராக உண்மையை எழுதியதால் பல வேலைகளில் இருந்து துறத்தப்படுகிறார் தனுஷி. புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே சிறந்த பத்திரிக்கையாளராகிறார்.

தனுஷ் பள்ளிப்பருவ நண்பன் போலீஸ் கேட்டதால் அரசியல்வாதியான சமுத்தியக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து எழுதுகிறார். இதனால் அரசியல் பகையை சம்பாதிக்கிறார் தனுஷ். இதனால் தங்கையை கடத்தி, தீ வைத்து எரிக்கிறார்கள் ரவுடிகள். தனுஷிற்கு ஏன் தீ என்றால் அலர்ஜி என்பதற்காக இந்த பிளாஷ்பேக்.

தங்கை இறந்த சோகத்தில் குடித்து குடித்து விழுந்து கிடக்கும் ஹீரோவை, ஹீரோயின் தைரியம் சொல்லி கொலையாளிகளை கண்டுபிடிக்க சொல்கிறார். தங்கையை கொலை செய்தவர்களை மாறன் எப்படி கண்டுபிடிக்கிறார் தனது தங்கை உயிருடன் மீட்டாரா என்பது தான மீதி கதை.

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
  • உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme