Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வரலாறு முக்கியம் திரை விமர்சனம் !!

வரலாறு முக்கியம் திரை விமர்சனம் !!

Posted on December 9, 2022

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான வரலாறு முக்கியம் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, காஷ்மீரா, பிரக்யா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் என பலர் நடித்துள்ளனர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தந்தையை கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. அதே தெருவில் கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் குடி வருகின்றனர். காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார். ஜீவா காஷ்மிராவை ஒருதலையாக காதலித்து பிறகு அது இருதலை காதல் ஆகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதை காமெடியாக சொல்லி இருக்கும் படம் தான் வரலாறு முக்கியம்.
எஸ்எம்எஸ் படத்திற்கு பிறகு ஜீவாவிற்கு இளைஞர்களை கவரும் விதமாக வரலாறு முக்கிய படம் அமைந்துள்ளது. படம் முழுக்க ஜாலியான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் ஜீவா. கதாநாயகி காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். முதல் படத்திலேயே பிரக்யா நன்றாக நடித்துள்ளார். ஜீவா மற்றும் விடிவி கணேஷ் இடையே நடக்கும் காமெடி கலாட்டாவிற்கு பல இடங்களில் கைத்தட்டுக்களும் விசில்களும் பறக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது.

படத்தை திரைக்கதையின் மூலம் நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காமெடி போர்சன்கள் நன்றாகவே ஒர்க் ஆக இருந்தது. அதுவும் லேடி கெட்டப்பில் ஜீவா அசத்தியிருக்கிறார்.

  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்
  • இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
  • பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது
  • ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
  • ஐபி கிளைம்ப் (IP Climb) மற்றும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme