Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பட்டத்து அரசன் திரை விமர்சனம்

பட்டத்து அரசன் திரை விமர்சனம்

Posted on November 26, 2022

பட்டத்து அரசன் படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரன், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மிகப்பெரிய கபடி வீரராக உள்ளார் ராஜ்கிரண். அரசு வேலையைவிட ஊரின் மானம்தான் பெரியது என்று ஊருக்காக கபடி விளையாடி வருகிறார். அவரது மகன் பேரன் என அனைவரும் ஊருக்காக கபடி ஆடுகின்றனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜ்கிரனின் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்ததாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பின்பு கபடி விளையாடத் தெரியாத அதர்வா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே பட்டத்து அரசன் படத்தில் கதை.

சண்டிவீரன் படத்துக்கு பிறகு அதர்வாவிற்கு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதை வசனம் கொண்ட படமாக பட்டத்து அரசன் படம் அமைந்துள்ளது. துடிப்பான கிராமத்து இளைஞனாக அசத்தியுள்ளார் அதர்வா. அவரின் அம்மாவாக ராதிகா வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை குடும்பம், பாசம் என அனைத்தையும் சேர்த்து ஒரு விருந்தாக படைத்துள்ளார் இயக்குனர் சற்குணம். கபடி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்த விதம் சிறப்பாக இருந்தது. பழைய கபடி வீரராகவும், தன் பேரன்களுக்கு அதே கபடியை கற்றுத்தரும் கண்டிப்பான தாத்தாவாகவும் தனது அனுபவ நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். கடைசியில், கபடி ஆட முடியாமல் தனது சிஷ்ய பிள்ளையிடமே கையேந்தி நிற்கும் காட்சியில் ராஜ்கிரண் நடிப்பை அசத்தி உள்ளார் .

அதர்வாவின் கதாபாத்திரத்திற்கு இன்னும் சிறிது முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். சிங்கம் புலி, பால சரவணன் போன்றோருக்கு இன்னும் காட்சிகம் அதிகமாக கொடுத்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்து இருக்கும். ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. கதாநாயகி ஆசிகா ரங்கநாத் ஒரு கபடி வீரராக அசத்தி உள்ளார். பட்டத்து அரசன் – குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme