Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

Posted on November 2, 2022

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர். சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme