Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கந்தாரா திரைவிமர்சனம்.!!

Posted on October 16, 2022

கந்தாரா திரைவிமர்சனம்.!!
கந்தாரா திரைவிமர்சனம்.!!
1970-களில் நடக்கும் கதையில் அரசனின் பரம்பரையில் வந்தவர், அந்தப் பழங்குடி மக்களிடம் நிலத்தை கொடுக்க வலியுறுத்துகிறார். இதே நிலப் பிரச்சினையை 1990களில் நாயகனும் எதிர்கொள்கிறார். ஒருபுறம் பண்ணையார் ஒருவர் பழங்குடியினர் வாழும் நிலத்தை பறிக்க நினைக்கிறார்; மறுபுறம் கிராம மக்கள் வன பகுதியைஆக்கிரமித்துள்ளதாக அரசு தரப்பிலிருந்து புகார் எழுகிறது. இறுதியில் பழங்குடி மக்களுக்கான நிலம் மீட்கப்பட்டதா? இல்லையா? – இதை அவர்களின் பண்பாடு, கலாசாரத்துடன் சொல்கிற அழுத்தமான கன்னட படமான ‘கந்தாரா’.

அண்மைக்காலமாக கன்னட சினிமாவின் முகம் மாறிவருகிறது. ஒரு காலத்தில் ரீமேக் படங்களுக்கான தளமாக இருந்த கன்னட சினிமா ‘கேஜிஎஃப்’ வருகைக்கு பின்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. ‘தியா’, ‘கருட கமனா விருஷப வாகன’, ‘777 சார்லி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் வழி தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள் கன்னடிகாஸ். அந்த வரிசையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தின் பெரும் பலமே அதன் எங்கேஜிங் தான். முடிந்த அளவிற்கு பார்வையாளர்களை எங்கேஜ் செய்ய இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து திரைக்கதை எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது.
முதல் பாதியில் ‘கம்பளா’ எனப்படும் எருமை மாட்டு போட்டி, அதையொட்டி சேற்றில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என காட்சி விருந்தாக பார்வையாளர்களை கவருகிறது படம். மற்றொருபுறம் யதார்த்ததுக்கு நெருக்கமான வாழ்விடங்கள், பழங்குடியின மக்களின் பண்பாட்டு கலாசாரம், வேட்டை தொழில் உள்ளிட்டவை கவனம் பெறுகின்றன. இடையில் வரும் பார்த்ததும் காதல், அதன் நீட்சியாக தொடரும் காதல் பாடல் இரண்டாம் பாதிக்கு அயற்சி. இறுதிக்காட்சியை மக்களின் நிலவியல் தன்மை சார்ந்து பதிவு செய்த விதம் ரசிக்க வைக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ஒன்லைன் காமெடிகள் துருத்திக்கொண்டில்லாமல், கதையுடன் பிணைந்து எழுதப்பட்ட விதம் சிரிக்க வைக்கதவறவில்லை.
நாயகியாக சப்தமி கவுடா. காதலுக்காகவும், ரொமான்ஸ் காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தபடுகிறார். வழக்கத்திலிருந்து எந்த வகையிலும் மாறவில்லை. பண்ணையாராக அச்யுத் குமார் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். ஆனால், அவருக்கான கதாபாத்திரம் எளிதில் கணிக்க கூடியதாகிவிடுவதால் பெரிய அளவில் சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. மற்ற நடிகர்கள் தங்களுக்கான நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.

படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் தொழில்நுட்பக்குழு. வரைகலை, இசைக்கோர்வை, கலை ஆக்கம், சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு உள்ளிட்டவை சிறந்த காட்சியனுபவத்திற்கு பக்கபலம் சேர்க்கின்றன. இடைவேளைக்கு முன்பான சண்டைக்காட்சிகளும், கம்பளா போட்டியும், இறுதிக்காட்சியில் திரையில் தெறிக்கும்

  • அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு
  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme