Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • சினம் திரை விமர்சனம்

சினம் திரை விமர்சனம்

admin September 16, 2022
சினம் திரை விமர்சனம்

சினம் திரை விமர்சனம்

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சினம்’. இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார்.

இப்படத்தின் கால நேரம் 1:55 நிமிடம். இப்படத்தின் கதை ‘ஃபேமிலி ஆடியன்ஸ்சை’ கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நேர்மையான காவல் அதிகாரி பாரி வெங்கட். இவருக்கு காதல் மனைவி, தூங்கும் முன்னர் கதை கேட்கும் குட்டி குழந்தை என அழகான குடும்பம். ஹீரோவிற்கு அடிக்கடி கோபம் கொள்ளும் சுபாவம். இதனால் தனது தினசரி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இந்நிலையில், இவரது மனைவி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தனது மனைவியை கொலை செய்தவர்களையும், கொலைக்கான காரணத்தையும் தேடி அலைகிறான் பாரி. அவனது முயற்சி வெற்றி பெற்றதா? கொலைக்கு பின்னால் ஒளிந்துள்ள மர்மம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது ‘சினம்’ திரைப்படம்.

ஆக்ஷன்-த்ரில்லர் திரைக்கதை தனக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூப்பித்துள்ளார் அருண் விஜய். எப்போதும் போல கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன், காவல் அதிகாரி வேடத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். அன்பு மனைவி பிணமாக கிடப்பதை பார்த்து, “அம்மு குட்டி என்னை பாரும்மா…” என கதறி அழும் காட்சியில் ரசிகர்களையும் சேர்த்து அழ வைக்கிறார் அருண். அதே நேரத்தில்,கோபம் தலைக்கேறி வில்லன்களை துரத்தி துரத்தி வெளுக்கும் காட்சியிலும் அப்ளாஸ்களை அல்லுகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த பாலக் லால்வானி இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும் தன் ரோலிற்கு ஏற்றவாறு என்ன செய்ய முடியுமோ அதை செவ்வனே செய்திருக்கிறார். இவர்களைத் தவிர, படத்தில் தெரிந்த முகமாக இருப்பது காளி வெங்கட் மட்டுமே. குணச்சித்திர வேடத்தில் ஏட்டைய்யாவாகவும், உதவி தேவைப்படும் சமையத்தில் ஹீரோவிற்கு உற்ற துணையாகவும் இருந்து மக்களின் மனதில் நிற்கிறார்.

வெகு சில படங்களே எடுத்திருந்தாலும், சிறப்பான கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறந்தவர் அவர். நினைத்தாலே இனிக்கும், வாகா, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை அதற்கு சான்றாக கூறலாம். இப்போது அந்த லிஸ்டில், சினம் திரைப்படமும் சேர்ந்துள்ளது. வார்த்தைகளே இல்லாத காட்சிகளிலும் நன்றாக பேசுகிறது ஷபீரின் பின்னணி இசை. பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. காதல்-சண்டை-சஸ்பென்ஸ் என எல்லா சீக்குவன்ஸிலும் பி ஜி எம்-மை தெறிக்கவிட்டுள்ளார்.

ரசிகர்களை எந்த இடத்திலும் கொட்டாவி விட வைக்காமல் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது ‘சினம்’. அளவான சண்டைக் காட்சிகளைக் கொண்டு ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள . படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் அனைத்தும் அபாரம். “மனிதநேயத்துடன் பிள்ளைகளை வளர்ப்போம், பெண் இனத்தைக் காப்போம்” என்ற கருத்தை வளவளவென்று இழுக்காமல்,சுருங்கச்சொல்லி மக்களின் கைத்தட்டல்களை பெறுகிறது சினம்

Post navigation

Previous வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்
Next Bringing Elements of Social Awareness and Entertainment, Phoenix Marketcity hosts a plethora of events, this weekend

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.