சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் உரையாட ட்விட்டர் ஸ்பேஸில் அவர்களது கேள்விகளுக்கு பல சுவாரஸ்ய பதில்களை அளித்துள்ளார்.
மீண்டும் எப்போ படம் இயக்குவீங்க? வெந்து தணிந்தது காடு படத்தில் ஏதாவது ஸ்பெஷல் சீன் இருக்கா? உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை இன்பதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உடல் எடையை குறைத்தது, மீண்டும் கம்பேக் கொடுத்தது எப்படி போன்ற கேள்விகளுக்கும் சிம்பு ரொம்பவே ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் சிம்பு, தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் நடத்திய ட்விட்டர் ஸ்பேஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்கள் இந்த ட்விட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்டு சிம்பு பேசுவதை கேட்டு உற்சாகமடைந்தனர்.
கம்பேக் கொடுத்தது எப்படி உடல் எடையை குறைப்பது மட்டுமல்ல, ஒரு விஷயத்தை செய்யணும்னு நான் மட்டும் இல்லை, யார் ஒருவர் முடிவெடுத்தாலும், அதில் உறுதியா இறங்கி வேலை செஞ்சா உள்ளுக்குள்ளே இருந்து ஒரு சக்தி அவர்களை அந்த செயலை அடைய வழிவகுக்கும் என மாநாடு படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தது பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார் சிம்பு.
ராதிகாவுடன் நடித்த அனுபவம் ராதிகா மேடமெல்லாம் சின்ன வயசுல இருந்தே தெரியும். அவங்க நடிச்ச ஜீன்ஸ் படத்தோட சீனை திரும்ப திரும்ப போட்டுப் பார்ப்பேன். அவர்களுடன் சரியாக் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நினைச்சிட்டு இருந்தேன், அதற்கான சான்ஸ் கிடைத்ததும் இந்த படத்தில் அவர்களுடன் பணியாற்றி உள்ளேன். நிறைய விஷயத்தை கண்களாலே நடிச்சிட்டு போயிடுவாங்கன்னு கூறினார் சிம்பு.
ஸ்பெஷல் சீன் இருக்கா மாநாடு படத்தில் சிங்கிள் டேக்கில் நீங்க நடிச்ச சீன் செம ஹிட் ஆனது. சிங்கிள் டேக் ராஜா என STRஐ ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல வெந்து தணிந்தது காடு படத்தில் ஏதாவது ஸ்பெஷல் சீன் இருக்கான்னு கேட்டதற்கு பதில் அளித்த சிம்பு, இரண்டு ஃபிளோர்ல நடக்குற மாதிரி ஒரு சீன் இருக்கு, அதை அந்த ஸ்பாட்லயே நடிக்க முடியாது, கொரியோகிராஃபி பண்ணி தான் பண்ணோம், நிச்சயம் ரசிகர்களுக்கு அது பிடிக்கும் என்றார்.
ரீடேக் ஆகிடுச்சு அந்த சீனில் எல்லாத்தையும் அடிச்சி உடைச்சிட்டு பேய்த்தனமா நடிச்சிட்டு இருந்தேன், எங்கேயேவது யாராவது ஒரு சின்ன மிஸ்டேக் பண்ணாலும், நாங்க உடைச்சதை எல்லாம் சரி செய்து விட்டுத் தான் ரீடேக் எடுக்க முடியும். எல்லாம் ஓகே ஆகிடுச்சுன்னு நடிச்சிட்டு இருந்த போ, எங்கேயோ ஒரு மிஸ்டேக் ஆகிடுச்சு, ரீடேக் பண்ணனும் சொல்லிட்டாரு, ரெஸ்ட் எடுத்து வந்து நடிச்சா அந்த பேய்த்தனம் போயிடுமுன்னு அங்கேயே இருந்து நடிச்சேன் என சிம்பு சொன்னதும் ரசிகர்கள் கூஸ்பம்ப் அடைந்தனர்.
மீண்டும் இயக்கம் நடிகர் சிம்பு மீண்டும் எப்போ படம் இயக்குவீங்க என கேட்டதற்கு, தனது 50வது படத்தை முடித்து விட்டு கண்டிப்பா ஒரு படம் இயக்குவேன் எனக் கூறியுள்ளார். மேலும், வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆன பிறகு பத்து தல படம் வருவதற்கு இடையே ரசிகர்களை நேரில் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.
