Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Posted on July 30, 2022

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP சார்பில் S கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 2.25 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டிரெய்லர் இப்படம் புதுவிதமான திரைக்கதையில் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் திரில் பயணம் என்பதை உறுதி செய்துள்ளது.

இபடத்தின் டிரெய்லர் வெளியீடு இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்களான கமல்ஹாசன், விக்ரம், அமீர் கான் உடன் மேலும் பலர் கலந்து கொண்ட விழாவில் சமீபத்தில் நடந்தேறியது. “டைரி” டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதில் படக்குழு உற்சாகமாக உள்ளது

2022 தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார். படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் டைரி திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா, சாம்ஸ், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:
இணை தயாரிப்பு: சேகர் பாபு
இசை: ரான் ஈதன் யோஹான்
ஒளிப்பதிவு இயக்குனர்: அரவிந்த் சிங் எடிட்டர்: S.P.ராஜா சேதுபதி
கலை இயக்குனர்: ராஜு. P
அதிரடி இயக்குனர்: பிரதீப் தினேஷ்
நடனம்: ஸ்ரீகிரிஷ் & விஜி சதீஷ்
ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி ஸ்ரீதரன் பாடல் வரிகள்: ஞானகரவேல்
தயாரிப்பு நிர்வாகி: மோகன் K
ஒலிப்பதிவு: சுரேன். G
ஒலி வடிவமைப்பு: S.அழகியகூத்தன் – சுரேன்.G
விஎஃப்எக்ஸ்: Skyhigh VFX Studio, Accel Media & Raymax Studios
DI: இன்ஃபினிட்டி மீடியா
விளம்பர வடிவமைப்பாளர்: பிரதூல் N.D ஸ்டில்ஸ்: அமீர்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா – D’One

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme