Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம்

ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம்

Posted on July 10, 2022

ஃபாரின் சரக்கு குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு நடக்கிறது. இதன் பொறுப்பை மகாலிங்கம் என்ற நபரின் தலைமையிலான ஒரு ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மறுபுரம் அந்த அமைச்சரின் மகனை தேடி கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகம் என்பதால் சற்று கதாப்பாத்திரத்தை நினைவு கூறுவது கடினமாகவுள்ளது. கதைகளமும் திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாக உள்ளதால் இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமிக்கு பாராட்டுகள் கிடைக்கிறது.

இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றவைக்கிறது. ’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் படத்தில் மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருப்பது பாராட்ட வைத்திருக்கிறது.

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வில்லனாக நடித்திருக்கும் மகாலிங்கம் வில்லனுக்கு உரிய பாணியில் நடிக்க முயற்சித்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் புதுமுகம் என்பதால் கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்திருப்பது பார்வையாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது. கதாநாயகிகளாக நடித்திருக்கும் அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் அவர்களின் இயல்பான நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme