Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அம்முச்சி சீசன் 2 இணைய தொடரின் திரைவிமர்சனம்

அம்முச்சி சீசன் 2 இணைய தொடரின் திரைவிமர்சனம்

Posted on June 18, 2022

அம்முச்சி சீசன் 2 தொடரை இயக்குநர் ராஜேஷ் காளிசாமி இயக்கியுள்ளார். பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அம்முச்சி சீசன் 2 இன் நட்சத்திரக் குழுவில் அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் மற்றும் சின்னமணி டைட்டில் ரோலில் அம்முச்சியாகவும் நடிக்கின்றனர். மேலும் செல்லதுரை ஆகா மு. பிரசன்னா பாலச்சந்திரன், மாகாளியாக சந்திரகுமார், மசநாய் மணியாக ராஜேஷ் பாலச்சந்திரன், ஆகியோருடன் ஸ்ரீஜா, தனம், சாவித்திரி, முத்தமிழ், மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைப்பாளராகவும், கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகவும், சந்தோஷ் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

அம்முச்சி சீசன் 2 டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைகருக்களின் வழியாக இந்தக்கதை பயணிக்கிறது.

மூன்று முக்கிய காதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கண்டிப்பான கிராமப்புற தந்தை மாகாளி, ஒரு ஆடம்பரமான கிராமப்புற வில்லன் மசநாய் மணி, படிப்பின் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட ஒரு கிராமப்புற பெண், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான போராடும் ஒரு நாயகன் உள்ளடக்கிய மூன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னணியில் இந்தக்கதை செல்கிறது.

டிரம் அடிக்கும் போட்டி, கிளாசிக் ரேக்ளா ரேஸ், சிலம்பம் போட்டி, பாரம்பரிய மல்யுத்தப் போட்டி மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய கூடுதல் சிறப்புக்கள் உள்ளது. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு ஒரு கிராமத்தின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் அழகான மற்றும் யதார்த்தமான வாழ்வியலை வெளிப்படுத்தும்.

  • புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்
  • இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு
  • பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி
  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme