Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கூழாங்கல்” எனும் Pebbles படம்!!!

கூழாங்கல் எனும் Pebbles படம்!!!

Posted on December 17, 2021

Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !

Pebbles அல்லது கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருகிறது. அவற்றில் உச்சமாக ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனை தாண்டி இப்போது இந்த குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மற்றொரு காரணமும் உள்ளது. ஆம், 2022 Spirit Awards உலக திரை விழாவில் ‘சிறந்த சர்வதேச திரைப்பட வகையின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களின் மத்தியில் இப்படம் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சீரான திரைப்பட வெளியீடுகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள “கூழாங்கல்” திரைப்படம் நமது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக மாறியுள்ளது.

இயக்குநர் P.S. வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள, “கூழாங்கல்” படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் தந்தை மற்றும் மகனாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் குமுளை-ஜெய பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme