Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம்

ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம்

Posted on December 14, 2021

இந்தப் படத்தில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்த ஷ்ரத்தா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, சனா ஷாலினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – K.C. பாலசாரங்கன், ஒளிப்பதி – மதன் சுந்தர்ராஜ், சுனில் G.N., படத் தொகுப்பு – சாம் RD.X, பாடல்கள் – அரவிந்த் குமார், கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர், மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை – கார்த்திக் மதுசூதன் திரைக்கதை, வசனம், இயக்கம் – கார்த்திக் மதுசூதன், சாம் RD.X
இந்தப் படம் பற்றி இயக்குநர் கார்த்திக் மதுசூதன் பேசும்போது, “மனித உணர்வுகளிலேயே மிகப் பெரிய உணர்வு எதுவென்றால் அது காதல் உணர்வுதான். அதற்கு எதிர்மறையானது கோபம்.

18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும். 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும். இதை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் ‘நீ செய்றது எனக்கு பிடிக்கல..’ ‘நான் பண்றது உனக்கு பிடிக்கல..’ ‘நீ சரி இல்ல… நான் சரியில்ல…’ என்று ஒருவர் மாற்றியொருவர் குற்றம், குறை சொல்கிறார்கள். அடுத்து பிரேக் அப்பாகி காதல் தோல்வி ஏற்படுகிறது.
அந்த எமோஷன்ஸ்தான் இந்தப் படம் முழுவதும் பயணிக்கும். கொஞ்ச நாள் கழித்து முன்னே போய் பார்க்கும்போது எல்லாமே நம்முடைய விதி என்றே தோன்றும்.
லவ் டிராமா, குடும்ப உறவுகளுக்கு இந்தப் படத்தில் அதீத முக்கியத்துவம் இருக்கும். இன்றைய இளைய தலை முறையினருகான படம் இது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடக்கும் கதைக் களம் இது.
சென்னை, பெங்களூர், மற்றும் கூர்க் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தை Anti Valentines day (காதலர் தினமான பிப்ரவரி 14-க்கு பிறகு 7 நாட்கள் வெளிநாடுகளில் கொண்டாடுவார்கள்) அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்..” என்கிறார் நாயகனும், இயக்குநருமான கார்த்திக்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தில் இடம் பெறும் ‘ரகசிய காதலனே வா வா’ பாடலும் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme