Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
‘RRR’ படத்தின் மூன்றாவது பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது

‘RRR’ படத்தின் மூன்றாவது பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது

Posted on November 27, 2021

Lyca Productions சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும், DVV Entertainment சார்பில் தானய்யாவும் இணைந்து வழங்கும், இந்திய திரைத் துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பு RRR(இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்,
‘பாகுபலி’ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த ‘RRR’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் இயக்குநர் S.S.ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் N.V.பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசும்போது, “பிரம்மாண்டமான இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பதில் எங்களுக்குப் பெருமைதான். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பாக இந்த RRR திரைப்படம் இருக்கும். இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம்…” என்றார்.

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme