சவுதி அரேபியா ரியாத்தில் ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார்

சவுதி அரேபியா ரியாத்தில் ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார்

சவுதி அரேபியாவில் பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை இளவரசர் முகமது பின் சல்மான் தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகளை நேரில் காண்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சினிமா மீதான தடையும் நீக்கப்பட்டது. 40 வருடங்களுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பொழுதுபோக்கு துறையை மேம்படுத்தும் வகையில் ரியாத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து விழா நடத்தினர்.

இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் ஜேசன் மோமோ, பெல்ஜியம் நடிகர் ஜீன் கிளாட் வான்டேம் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஜாக்கிசான் பேசும்போது, “எனது படத்தின் படப்பிடிப்பை ரியாத்தில் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். படக்குழுவினருடன் விரைவில் இங்கு வருவேன்” என்றார். அங்கு ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார். அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எனது கதாநாயகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இதே படங்களை ஜாக்கிசானும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *