18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா வரும் ஜூன் 15 முதல் 21 வரை நடைபெற உள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள திரைப்பட பிரிவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில், தில்லி (சிரிஃபோர்ட் கலையரங்கம்), கொல்கத்தா (சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்), சென்னை (தாகூர் திரைப்பட மையம்) புனே (இந்திய திரைப்பட ஆவணக் காப்பகம்) ஆகிய இடங்களிலும் இந்த விழா நடைபெறும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜூ கூறினார்.

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா 2024 ஜூன் 15 முதல் 21 வரை நடைபெற உள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இந்தத் தகவல்களை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துக்கொண்டபடி இத்திரைப்பட விழாவில் சாதனை அளவாக 38 நாடுகளைச் சேர்ந்த 65 மொழிகளில் 1,018 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

சர்வதேச (25), தேசிய (77) போட்டிப் பிரிவுகளுக்கு திரைப்பட ஆளுமைகள் கொண்ட 3 தெரிவுக் குழுக்களால் 118 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2024 ஜூன் 15 அன்று தொடக்க விழாவில் முதலாவதாக “பில்லி & மோலி, ஆன் ஆட்டர் லவ் ஸ்டோரி” என்ற திரைப்படம் திரையிடப்படும். இது தில்லி, கொல்கத்தா, புனே, சென்னை ஆகிய இடங்களிலும் திரையிடப்படும். இந்த விழாவில் தங்கச் சங்கு விருது பெறும் திரைப்படம் 2024 ஜூன் 21 அன்று நிறைவு நாளில் திரையிடப்படும்

மும்பை திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் பதிவு எளிதானது,

அதே சமயம் கட்டாயமானது.

மும்பை சர்வதேச திரைப்படவிழாவுக்கான இணையதளம் அல்லது க்யூஆர் கோட் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். புக் மை ஷோ என்பதன் மூலமும் பிரதிநிதிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரதிநிதிகள் பதிவுக்கான கட்டண விபரம்:

மும்பை – மொத்த விழாவிற்கான பங்கேற்புக் கட்டணம் ரூ.500
தில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் புனே-க்கு கட்டணமில்லை
மாணவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு கட்டணமில்லை
பதிவு செய்வதற்கான இணையதளம் www.miff.in

சென்னையில் நடைபெறும் 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பவர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் .

மேலும் , விழா குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள மேற்குறிப்பிட்ட வலைதளத்தில் சென்று பார்க்கவும்.