HDFC Bank முழுகும் நிலைக்கு வந்தால் அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும்

அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும்

HDFC Bank தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய Pass bookல் கீழ்கண்ட செய்தியை முத்திரையிட்டு அறிவிக்கின்றது:-

“பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட எங்கள் வங்கியின் “டெபாசிட்டுகள்” அனைத்தும் Deposit Insurance Credit Guarantee Corporation of India (DICGC)ல்
காப்பீடு (Insure) செய்யப்பட்டுள்து.
எங்கள் வங்கி முழுகும் நிலைக்கு வந்தால் (திவால்) உங்கள் Depositஐ திரும்ப பெற நீங்கள் கோரும் Claimக்கு – (அது Rs.1.00 லட்சத்திற்கு மேல் எவ்வளவு இருந்தாலும்) அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும்”…

அதாவது பொது மக்கள் Deposit ஆனது 5 லட்சம்/ 10 லட்சம் / ஏன் 1 கோடி ரூபாயாக இருந்தாலும் -அவர்கள் வங்கி முழுகும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக பட்சம்
Rs.1.00 லட்சம் மட்டுமே இழப்புத் தொகையாகக் கொடுக்கப்படும். மீதி அனைத்தும் மொத்தமாக இழப்பே ஆகும்.

இத்தகைய DICGC Claim Clause இத்தனை நாளாக நடைமுறையில் இருந்தாலும் இப்போதுதான் வங்கிகள் முழு மூச்சுடன் இறங்கி அறிவிப்பது பொது மக்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுகிறது..அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத்  தொகையாகக் கொடுக்கும்

இத்தகைய Clause தனியார் வங்கிக்கு மட்டும்தான் பொருந்துமா? அல்லது அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளுக்கும் உண்டா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை..

டெபாசிட் தாரர்களுக்கு இது எத்தகைய அதிர்ச்சி தரும் அறிவிப்பு.

இந்திய வங்கிகளின் இன்றைய “வாராக் கடன்” நிலையைப் பார்க்கையில் “வங்கிகள் திவால் ஆகுமா / ஆகாதா என்பதை” சரியாக நிர்ணயிக்க முடியாத அதிர்ச்சியான கால கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் உண்மை..

இதைக் கண்ட பிறகு எவர்தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்வார்கள்.?

கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை நஷ்டப்பட்டு நட்டாற்றில் தவிக்க எவர்தாம் விரும்புவர்..?

அதற்குப் பதில் மக்கள் தம் சேமிப்பை மொத்தமாக “பணம்” ஆகவே (Cash) வைத்துக் கொள்ளவும் நினைப்பார்கள்.

இத்தகைய அறிவிப்பால் வங்கிகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படாதா..?

மொத்தத்தில் இந்திய தேசத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும் அன்றோ..!!

எனவே மத்திய அரசாங்கம், நிதித்துறை மற்றும் வங்கித்துறை இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு “பொது மக்களின் வங்கி வைப்புத் தொகைக்கு 100% உத்திரவாதம் அளிக்க” ஆவன செய்ய வேண்டும்.

இல்லையேல் வங்கி மட்டுமன்றி பொது மக்களின் வாழ்கை ஆதாரமும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்..

இக்குழு அங்கத்தினர்களின் – குறிப்பாக வங்கி மற்றும் நிதித் துறையினரின் மேலான கருத்தை வரவேற்கிறோம்… இந்த DICGC சட்டம் 1961 ஆம் கொண்டு வந்திருந்தாலும், இதை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *