தமிழ் சினிமாவில் மாபெரும் நிறுவனமான லைகா இன்று திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்களை களையெடுக்க கமிஷனரிடம் புகார் மனு ஒன்று தரப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் ஆரம்பத்தில் விஜயின் கத்தி மூலம் தமிழ் சினிமாவில் காலூன்றியது. மாபெரும் வெற்றி அடைந்து. அந்த படம் லாபத்தையும் கொடுத்தது.
அதன்பிறகு பல பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தாலும் எல்லாமே தோல்வியிலே முடிந்தது. ஒருபக்கம் திரைப்படங்களின் மூலம் நஷ்டம். மறுபக்கம் தயாரிப்பு செலவுகளில் ஏற்பட்ட கோல்மால்களும், வெளிநாட்டு உரிமையை விற்பதில் ஏற்பட்ட கோல் மால்கள் கேக்க ஆளே இல்லை என தயாரிப்பு நிர்வாகிகளால் ஏற்பட்ட கோளாறுகளால் இன்று பல கோடி ரூபாய்களை இழந்து நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளது லைக்கா நிறுவனம்.
லண்டனில் வசிக்கும் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மொத்த இழப்பையும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். சில மாதங்களுக்கு முன் தனக்கு மிகவும் நெருக்கமான ஆடிட்டர் கலை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி அங்கு நடப்பது எல்லாவற்றையும் கணக்கை சரி பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
ஆடிட்டர்கள் மொத்த கணக்கையும் பார்த்து எல்லாவற்றையும் கொண்டுபோய் லைக்கா நிறுவன சுபாஷ்கரன் இடம் கொடுத்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுபாஸ்கரன் ஒட்டுமொத்த தயாரிப்பு நிர்வாகிகளையும் பணி நீக்கம் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் 2. O படத்தின் தயாரிப்புச் செலவையும், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் கணக்கு வழக்குகளையும், இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு கணக்கு வழக்குகளையும் பார்த்த சுபாஷ்கரன் இந்த முடிவு எடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் பல கோடி ரூபாய்களை மோசடி செய்த இவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்
Leave a Reply