இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு பிரவேசிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பேசியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு பாகிஸ்தான், ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ள ஸ்மிருதி இரானி,
ராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமேதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தியிடம் இருந்து ஆதரவை பெறுவது பாகிஸ்தானுக்கு இது முதல்முறையான சம்பவம் கிடையாது. தேசத்தின் கொடியை பற்றி குறைவாக சிந்தித்து, அதனுடைய மதிப்பு, மாண்புகளை குறைவாக மதிப்பிடும் தலைவர் ஒருவர் இங்கு இருக்கிறார் என்பது நாட்டின் துரதிர்ஷ்டம் ஆகும். அந்த தலைவர் எதிரி நாட்டால் அதிகமாக விரும்பப்படுகிறார். ராகுல் காந்தி, நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாமல் இருந்தாலே, நாடு சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் எனவும் ஸ்மிருதி இரானி பேசியுள்ளார்.
Leave a Reply