நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் “எனக்கும் ஒரு எலிக்கும் நடக்கும் போராட்டமே ‘மான்ஸ்டர்’படத்தின் கதை. கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். பிரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த ‘நியூ’ உள்ளிட்ட படங்களை பார்த்து இருப்பார். அந்த எண்ணத்தில் அவர் என்னுடன் நடிப்பது சரியாக இருக்குமா என்று தயங்கி இருக்கலாம்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.