பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினியை சந்தித்த முக்கிய நபர் ❗
கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வந்த ‘தர்பார்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து சிறிய விடுப்பில் சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக தேர்தலுக்கு தயார் ஆகுமாறு ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.