உயர்ந்த மனிதன்’ விவகாரமாக மும்பை செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா
‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இயக்குநர் தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். ‘மான்ஸ்டர்’ திரைக்கு வந்த பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்”. என்று தெரிவித்துள்ளார்.