’35 – சின்ன விஷயம் இல்ல திரை விமர்சனம்’

35- சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம் சாமானிய மக்களும் தனது பிள்ளைகளும் கொண்டாட கூடிய படமாக திரையில் ஜொலிக்கிறது.

அருணின் இது போன்ற கேள்விக்கு எந்த எண்களையும் பூஜ்ஜியத்துடன் பெருக்கினால் பூஜ்ஜியம் கிடைக்கும். பூஜ்யத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. கணிதத்தில் இந்த விதிகள் எல்லாம் ஏன் இருக்கிறது என்று எதார்த்தமான கேள்விக்கு கணித ஆசிரியர் பதில் கொடுக்க முடியாமல் திணறும்போது? இப்படி கேள்வி கேட்கும் சிறுவன் பள்ளியில் சந்திக்கும் பிரச்சனைகளை படமாக வந்திருக்கிறது. 35- சின்ன விஷயம் இல்ல) கணிதத்தில் ஜீரோ மார்க் எடுத்த அருண் முழு ஆண்டு தேர்வில் 35 மார்க் எடுத்தானா ? அருணுக்கு 35 மார்க் எடுக்க உதியவர்கள் யார் யார் உன்கிட்ட கேள்விக்கு பதில் தான் இந்த திரைக்கதை

பெரும்பாலான மாணவர்களின் படிப்பிற்கு முட்டுக்கட்டையாக அமைவது(0 zero பூஜ்ஜியம் ) இந்த கணித பாடம் தான் அதனை திரையில் அனைவரும் புரியும் படியாக திரைக்கதை அமைத்து சிறந்த நடிகர்களை தேர்வு செய்து திரையில் ஒரு கல்வி (கணித) காவியமாக இன்றைய மாணவர்களின் உணர்வுகளையும் பெற்றோரின் உணர்வுகளையும் திரையில் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது இது குழந்தைகளை பற்றிய படம் அல்ல. தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ( பாடம் ) படம்..

அறிமுக இயக்குநர் நந்தகிஷோர் இந்த முயற்சி திரையில் அனைவரையும் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நாம் பள்ளியில் படித்த நாட்களையும், படிக்கும் காலத்தில் நம்மில் பலர் கணிதத்தில் (0 ZERO பூஜ்யம் ) மார்க் மற்றும் கணித பாடத்தால் நம் பட்ட அவமானங்கள் ( குடும்பத்தினர்) அனைவரின் துயரையும் திரையில் ஜொலிக்க வைத்து பள்ளிப் பருவ நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர்.

ஒரு சிறந்த தாயாக நிவேதா தாமஸ் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து திரையில் அனைவரின் கவனத்தை பெறுகிறார் . தன் பையன் நன்றாக படிக்க ஒரு சராசரி தாய் கணிதத்தை , திருமலை படிக்கட்டில் நடந்து, படிக்கட்டுகளை எண்ண வைத்து கழித்தல், கூட்டல் புரிய வைக்கும் தாய் என சில காட்சிகளை பார்க்கும் போது இப்படி வாழக்கையோடு இணைந்த கணிதத்தை புரிய வைப்பது என்ற அனைத்து விஷயங்களையும் செய்கிறார் நிவேதா.

திரைக்கதையில் அப்பாவாக நடித்திருக்கும் விஷ்வதேவ் பாசம், ரொமான்ஸ், கண்டிப்பு என சிறந்த தந்தையாக தனது நடிப்பினை திரையில் ரசிக்கும் படி கொடுத்துள்ளார்.

விவேக் சாகரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

'35 - சின்ன விஷயம் இல்ல திரை விமர்சனம்
’35 – சின்ன விஷயம் இல்ல திரை விமர்சனம்