‘மேக்ஸ்’ திரை விமர்சனம்

'மேக்ஸ்' திரைப்பட விமர்சனம்
‘மேக்ஸ்’ திரைப்பட விமர்சனம்

கிச்சா சுதீப் நடிப்பில் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மேக்ஸ் (MAX). கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகி உள்ளது மேக்ஸ் படம். டிசம்பர் 27 முதல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது. வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேக்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கிச்சா சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், பிரமோத் ஷெட்டி, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேக்ஸ் திரைப்படம் ஆக்ஷன் விருந்தாக வெளிவந்துள்ளது
மேக்ஸ் திரைப்படம் ஆக்ஷன் விருந்தாக வெளிவந்துள்ளது

கிச்சா சுதீப் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீப் ட்ரான்பர் ஆகி ஒரு புது ஸ்டேஷனில் நாளை பொறுப்பேற்கா இருந்த நிலையில் அன்று இரவு அரசியல் பிரபலம் மகன்கள் தாறுமாறாக கார் ஓட்டி போலிஸாரிடம் சண்டை போடுவதை பார்த்து சுதீப் கைது செய்கிறார்.

அவர் கைது செய்துவிட்டு வீட்டிற்கு போக, போலிஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள் எல்லோரும் ஒரு வேலை என ஸ்டேஷனை பூட்டி விட்டு செல்ல, வந்து பார்க்கும் போது அந்த இரு கைதிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி போலிஸ் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளனர்.

இதை பார்த்த எல்லோருக்கும் கடும் ஷாக் அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் CCTV-யும் வேலை செய்யாமல் இருக்க குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு புறம் திணற அதனை கண்டுபிடிக்க ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு உதவுவதற்காக கிச்சா முன் வருகிறார் இதனைத் தொடர்ந்து , கண்டிப்பாக இதை செய்தது போலிஸ் தான் என அரசியல்வாதிகள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி எல்லா போலிஸாரும் அஞ்ச, இந்த பிரச்சனைகளை எல்லாம் சுதீப் எப்படி தீர்த்தார் என்ற பரபரப்பான திரைக்கதையே இந்த படம்.