‘புஷ்பா 2’ திரை விமர்சனம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தெலுங்கு மொழியில் உருவாகி உள்ள புஷ்பா 2 படம் தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

‘புஷ்பா 2’ திரை விமர்சனம்
‘புஷ்பா 2’ திரை விமர்சனம்

‘புஷ்பா 2’ திரை விமர்சனம்
‘புஷ்பா 2’ திரை விமர்சனம்

அல்லு அர்ஜுன். நடிப்பில் புது உச்சம் தொட்டிருக்கிறார்.ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். தன் நடிப்பை பற்றி யாரும் குறை சொல்லவே முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். தன்னால் டான்ஸ் மட்டும் அல்ல மிரட்டலாக நடிக்கவும் முடியும் என மீண்டும் நிரூபித்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா). அதேவேளையில், புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்). ஆந்திர முதல்வரை சந்திக்க செல்லும் புஷ்பாவை, முதல்வருடன் ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார் ஸ்ரீவள்ளி. ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் முதல்வர் (ஆடுகளம் நரேன்) மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை (ரமேஷ் ராவ்) முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார். அதன் பிறகு என்னவானது? புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகை தீர்ந்ததா என்பதே திரைக்கதை.