’ஃபேமிலி படம்’ திரை விமர்சனம்

நடிகர்கள் : உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்‌ஷா, பார்த்திபன், ஸ்ரீஜா ரவி, சந்தோஷ், காயத்ரி, மோகனசுந்தரம்
இசை : அனீவி & அஜீஷ்
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
இயக்கம் : செல்வ குமார் திருமாறன்
தயாரிப்பு : கே.பாலாஜி

திரை கதையோடு வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குநர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘ஃபேமிலி படம்’

திரைப்படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், தயாரிப்பாளரை தேடி அலைகிறார். அவரது தேடலுக்கான வெற்றியாக தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வருகிறார். மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்கும் உதய் கார்த்திக்கிற்கு சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் உதய் கார்த்திக், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து வருந்தும் போது, அவரது குடும்பம் அவரது லட்சியத்திற்கு துணை நிற்கிறது. குடும்பத்தின் துணையோடும், உதவியுடம் மீண்டும் தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கும் உதய் கார்த்திக் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘ஃபேமிலி படம்’.