கங்குவா திரை விமர்சனம்

கங்குவா திரை விமர்சனம்-indiastarsnow.com
கங்குவா திரை விமர்சனம்-indiastarsnow.com

கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பான் – இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் இன்று திரைப்படமாக சுமார் 11,500 திரைகளில் வெளியாகிள்ளது, கங்குவா திரைப்படம் இந்திய அளவில் 2டியில் 338 காட்சிகள் , 3டியில் 434 காட்சிகள் திரையிடபட்டுள்ளது,காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கும். நவம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1070 ஆம் நூற்றாண்டில் போர் வீரனாக கங்குவா மற்றும் 2024 ஆம் நூற்றாண்டில் பிரான்சிஸ் ஒரு பவுன்ட்டி ஹன்டர் என இரு வேடங்களில் சூர்யா திரையில் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு ,உடல்மொழியால் மிரட்டுகிறார் சூர்யா .

ரோமானிய அரசு வீரமும், இயற்கையும் விளைந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை(100 வீரர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான் கொடுவா). இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் கொடுவா தீயில் எரிக்க , அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று இன மக்கள் கூறுகின்றனர். அதற்கு கங்குவா எதிராக நிற்க, என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி, கங்குவன் கையில் மகனை ஒப்படைத்து விட்டு உடன் கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி.. அதன் பின்னர் என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்ல துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை

ஆக்ரோஷ வில்லனாக உதிராவின் உருவத்தில் வரும் பாபி பார்வையாளர்களை நிலை குலைய செய்கிறார். திஷா பதானி வெறும் கிளாமருக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். யோகி பாபு காமெடி எப்போதும் இடம் பெறும் தரத்தில் இல்லை.

கங்குவா படத்தின் பலம் படத்தின் கலை இயக்கம் மற்றும் கிராஃபிக்ஸ் இந்த இரு குழுவின் சிறப்பான பணியே, கங்குவாவின் உலகத்தை கற்பனைத் தீவு, காடு, மலை, அருவி என ஒரு ரம்மியமான பழங்கால தனி உலகைச் சிறப்பாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் நிஜத்திற்கு நெருக்கமாக திரையில் ரசிக்கும் படி சிறப்பாக உள்ளது 3டி தொழில்நுட்பம் ஆகியவை கங்குவா படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்துச் சென்றிருக்கிறாது கங்குவா திரைப்பட குழு.