நான் லொடுக்கு பாண்டிய நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் தான் சூர்யா. நந்தா படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார்.
இந்தியாவின் தலைசிறந்த நடிகன் சூர்யா, கங்குவா படத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமில்ல, இந்தியா மட்டுமில்ல, உலகில் ஒரு தலைசிறந்த நடிகனாக ஒரு தமிழன் இருக்கிறான் என்று சொன்னால் அது சூர்யா தான். இதை நான் மேடைக்காவும்,நீங்கள் கை தட்டவேண்டும் என்பதற்காகவும் சொல்லவில்லை. அவர் மேலையும், அவர் செய்யும் தொழிலை நேசிக்கும் விதமும் நிச்சயம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு வருவார் என்று நான் மனமார சொல்லுகிறேன். எத்தனையோ படங்கள் வரும் போகும், ஒரு சில திரைப்படம் தான் காலங்கள் கடந்தும் மனதில் நிற்கும் அப்படி ஒரு திரைப்படம் தான் கங்குவா என்று நடிகர் கருணாஸ் விழாவில் பேசினார்.