ஒற்றைப் பனை மரம் திரை விமர்சனம்

ஒற்றைப் பனை மரம் திரை விமர்சனம்
ஒற்றைப் பனை மரம் திரை விமர்சனம்
2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் போரில் உயிர் தப்பிய பெண் குயந்தை (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள்.

கிளிநொச்சி, போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை மக்களுக்கா போராடிய போராளிகளை . “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர். போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் வாயும் அப்பாவி குடும்ப பெண்கள் சிலரைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கின்றனர்.

ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடித் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஒரு சங்கத்தைக் கட்டமைக்க நினைக்கிறார் சுந்தரம். ஆனால், ‘வெள்ளை வேன்’ கொண்டு கடத்தி அரசத் தரப்பினர் அவரைச் சித்திரவதை செய்கின்றனர்.

இப்படிப்பட்ட வாழ்க்கையில் இந்த மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் நிலை எப்படிப்பட்ட அலைக்கழிப்புகளில் சிக்குகிறது, துணைக் கதாபாத்திரங்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியில் என்ன செய்கின்றன, அங்கே உரிமைகளுக்கான போராட்டக் குரல் ஓய்ந்துபோய்விட்ட ஒன்றா என்பதை நோக்கி திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.