மர்மதேசம் படத்தின் இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் “ஐந்தாம் வேதம்”. ஜீ5-ல் வரும் வெள்ளி முதல் இத்தொடர் ஸ்டிரீமாக இருக்கிறது.
வேத சாஸ்திர படி இன்றும் நடைமுறையில் இருப்பது இந்த நான்கு வேதம் ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் மற்றும் அதர்வவேதம் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐந்தாவது வேதம் ஒன்று இருக்கிறது என்றும், அதன் மூலமாகவே பிரம்மன் மனிதர்களை படைத்தார், என்ற கற்பனையை புராணம் மற்றும் அறிவியலோடு இணைத்து சொல்லியிருக்கும் மர்மம் மற்றும் திரில்லர் இணையத் தொடர் ‘ஐந்தாம் வேதம்’.
தென் தமிழகத்தில் இருக்கும் மிக பழமையான சிவாலயத்தில் ரகசிய இடத்தில் இருக்கும் ஐந்தாவது வேதம் வெளி வரவேண்டிய நாளுக்காக அந்த கோவில் பூசாரி காத்துக் கொண்டிருக்க, அதே வேதத்தின் மூலம் இந்த உலகத்தில் மனிதர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் ஐந்தாவது வேதத்தை தேடுகிறார்கள். மறுபக்கம், மாமிசத்தை கொண்டு 3டி பிரிண்ட் மூலம் அப்படியே அசல் மாமிசத்திலான உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபடுகிறது. அவர்களும் ஐந்தாம் வேதத்தை கைப்பற்ற முயற்சிக்க, இறுதியில், ஐந்தாம் வேதம் ஒன்று இருப்பது உண்மையா?, அதை தேடுபவர்கள் கண்டுபிடித்தார்களா?, அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆகியவற்றை மர்மம் நிறைந்த காட்சிகளோடும், சுவாரஸ்யமான ஜீ5 இணையத் தொடர்ரக சொல்வதே ‘ஐந்தாம் வேதம்’.
முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தொடர் முழுவதும் பயணித்து திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன், மர்மம் மற்றும் திகில் காட்சிகளை பகல் நேரத்தில் படமாக்கினாலும் அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்து விடுகிறார்.
ரேவாவின் பின்னணி இசையில் ஐந்தாம் வேதத்தின் மிக மிக சிறப்பு .
ஐந்தாம் வேதம் ஜீ5 இணையத் தொடர் மர்மம் மற்றும் திகில் அனுபவத்தை கொடுப்பதோடு புராணத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கும் பிணைப்பை பற்றி யோசிக்க வைக்கிறது.