வெங்கட் பிரபு இயக்கி எம்.எஸ். காந்தி(விஜய்) நடித்துள்ள தி கோட் திரைப்படம் (5.9.2024)இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தி கோட் படத்தின் தொடக்கத்தில் என்ன திரைக்கதை என்பதை தெளிவுபடுத்தாமல் படத்தின் தொடக்கத்தில் ரயில் சண்டை கட்சி வைத்து பார்வையாளர்களை குழப்புகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு . விஜய்( காந்தி) (ஜீவனை)இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார், பிரபுதேவாப் (கல்யாண்), பிரசாந்த் (சுனில்) ஜெயராம்( நஸிர்) , அஜ்மல் அனைவரும் SATS எனப்படும் ஆண்டி டெரரிஸம் ஸ்பெஷலிஸ்ட் குழுவிற்காக ரகசியமாக வேலை செய்து வருகிறார்கள். இதே துறையில் பணியாற்றிய மேனன் (மோகன்) தீவிரவாதிகளுக்கு உதவி செய்து தேசத்துரோகியாக அறிவிக்கப்படுகிறார். படத்தின் தொடக்கத்தில் கென்யாவில் காந்தியின் சாட்ஸ் குழு ஒரு மிஷனை நடத்தி முடிக்கிறார்கள். இதில் மேனனின் மகன் உட்பட அவரது குடும்பம் அந்த இரயில் பயணத்தில் இறந்துவிடுகிறது .ரயில் இருந்தது உயிர்தப்பும் மேனன் காந்தியை பழிவாங்க நினைக்கிறார் மேனன் (மோகன்).
தாய்லந்தில் நடக்கும் ஒரு மிஷனில் விஜய் தன்னுடைய மகனை தொலைக்க நேரிடுகிறது. அதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? மகனுக்கு என்ன ஆனது? போன்ற கேள்விக்கு பதில் தன இந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைக்கதை .
ரஷ்யாவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது அதனை சரி செய்ய செல்லும் விஜய், ரஷ்யா தூதரகத்தில் தன்னை போன்ற தோற்றத்தில் ஒருவரை சந்திக்கிறார். அது தன்னுடைய மகன் என அறிந்து, அவரை சென்னை அழைத்து வருகிறார். அதற்குப் பிறகு தன்னுடன் இருக்கும் ஒவ்வொருவரையாக விஜய் இழக்கிறார். கோட் படத்தின் முதல் பாதி குடும்பம், சின்ன செண்டிமெண்ட், ஆக்சன் என நகர்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். அப்பா, மகன் விஜய் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. வழக்கமான கதையை விஜய் எனும் ஒருவரை மட்டுமே நம்பி படமாக எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். அவரின் நடிப்பை குறை சொல்ல முடியாது. வில்லத்தனம் செய்தும் அசத்தியிருக்கிறார். கோட் படத்தின் மிகப் பெரிய பலமே தளபதிஇரண்டாம் பாதி முழுவதும் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மோதலும் துரத்தலும்தான். அதை இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்துடன் எழுதத் தவறியிருக்கிறது வெங்கட் பிரபு,
திரையில் ரசிகர்களுக்கு பிரமாண்டமும் குறையாமல் படத்தின் தரத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியிருக்கிறது சித்தார்த் கேமரா பதிவு மற்றும் ராஜீவனின் கலை இயக்கம்,மற்றும் எடிட்டர் வெங்கட் ராஜனின் எடிட்டிங் தனி சிறப்பு.
பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள். அதில் பிரேம்ஜியை ஓவர்டேக் செய்துவிடுகிறார் யோகிபாபு.
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தி கோட்.