ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் அதன் கல்விசார் பணியாளர்கள் குழுவிற்காக 200+ ஐஐடி பட்டதாரிகளை பணியில் சேர்த்திருக்கிறது
● எதிர்கால புத்தாக்குனர்களை உருவாக்க வேண்டுமென்ற தனது இலட்சியத்தில் உறுதி கொண்டிருக்கும் ஆர்க்கிட்ஸ், அதன் பள்ளிகளில் திறன்மிக்க ஐஐடி பட்டதாரிகளை பணி நியமனம் செய்திருக்கிறது.
இந்தியா: ஆகஸ்ட் 26, 2024: இந்தியாவில் ஒரு முன்னணி K12 பள்ளி சங்கிலித்தொடர் குழுமமான ஆர்க்கிட்ஸ், நாடெங்கிலும் உள்ள அதன் பள்ளிகளில் ஐஐடியில் கற்றுத் தேறிய பட்டதாரிகள் பணியில் சேர்க்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. கல்வி செயல்தளத்தில் முன்னோடித்துவ நடவடிக்கையான இது, இந்தியாவில் ஸ்டெம் கல்வியை மேலும் துரிதமாக்குவதில் நேர்த்தியான மாற்றத்தை கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாக இருக்கக்கூடும். ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தனது ஆர்க்கிட்ஸ் கரியர் ஃபவுண்டேஷன் செயல்திட்டத்தை விரிவாக்குவதற்கு ஆசிரியர்களாக செயல்பட சுமார் 200 ஐஐடி பட்டதாரிகளை சமீபத்தில் பணிக்கு தேர்வு செய்திருக்கிறது. ஐஐடி கான்பூர், ஐஐடி மண்டி, ஐஐடி புவனேஷ்வர் போன்ற முன்னணி ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
ஐஐடியில் கல்வி பயின்ற இந்த ஆசிரியர்கள், மேற்குறிப்பிடப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள்; அதுமட்டுமின்றி, சரியான கரியர்கள், ஆராய்ச்சி அல்லது தொழில்முனைவு திறனை தேர்வு செய்வது தொடர்பான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சார்ந்த முன்னேற்றத்திற்கான முடிவுகளில் மாணவர்களுக்கு இவர்கள் வழிகாட்டுவார்கள். கல்வித்திறனோடு யதார்த்த நடைமுறையில் கல்வியைப் பயன்படுத்துவதை ஒருங்கிணைக்கின்ற மற்றும் முழுமையான வளர்ச்சியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கின்ற ஆர்க்கிட்ஸ், இந்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை நிறுவ இந்த இளம் ஐஐடி கல்வியாளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறது.
STEM – ல் கற்பிக்கப்படும் பாடங்களை நேசிப்பவர்களுக்கும் மற்றும் விரும்பாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு வினையூக்கியாக ஆர்க்கிட்ஸ் – ல் OCFP திட்டம் செயலாற்றுகிறது; ஒவ்வொரு குழந்தையின் முழு ஆற்றலையும், செயல்திறனையும் வெளிக்கொணர்வதற்கு கற்றலில் ஆயுட்காலம் வரை நீடிக்கும் ஆர்வத்தை மனதில் பதிய வைக்கிறது. புத்தாக்கமான கற்பித்தல் வழிமுறைகளையும் மற்றும் பயன்பாடு சார்ந்த கற்றலையும் இத்திட்டம் தனித்துவமாக வழங்குகிறது. நிஜ வாழ்க்கையில் கோட்பாடு ரீதியில் கற்ற அறிவை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவுவதற்காக பல்வேறு செயல் நடவடிக்கைகள் மற்றும் செய்முறை விளக்கங்களிலும் இக்கல்வியாளர்கள் ஈடுபடுகின்றனர். பள்ளியில் வெற்றி பெறவும் மற்றும் STEM பிரிவில் திறன்மிக்க கரியர்களை தொடரவும் பெரும்பாலான மாணவர்களை இந்த வழிமுறை அனுமதிக்கிறது. தற்போது இந்தியாவெங்கிலும் 100+ ஆசிரியர்களை OCFP உறுப்பினர்களாக கொண்டிருக்கிறது. இச்செயல்திட்டத்தின் வெற்றிக்கும் மற்றும் தரமான STEM கல்விக்கு வளர்ந்து வரும் தேவைக்கும் இவ்விரிவாக்கம் ஒரு தெளிவான அறிகுறியாகும்.
ஆர்க்கிட்ஸ் கேரியர் ஃபவுண்டேஷன் திட்டத்தின் தலைவரான ஷ்லாக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து விளக்கமளிக்கையில், “ஐஐடி பட்டதாரிகள், வகுப்பறைக்கு ஒரு வேறுபட்ட பரிமாணத்தைக் கொண்டு வருகின்றனர். இந்த STEM பாடங்களில் அவர்களது ஆழமான புரிதலும் மற்றும் நடைமுறைத்தன்மையும் மாணவர்களுக்கு சிக்கலான பாடங்களிலும் அதிக விரிவான மற்றும் நுட்பமான கற்றலை அவர்கள் வழங்குமாறு செய்கிறது. பள்ளிகளில் முன்பைவிட இப்போது இது அதிக பயனுள்ளதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது. ஏனெனில், வெறும் கற்றலில் மட்டும் மாணவர்கள் தேர்ச்சி பெறுமாறு இந்த ஆசிரியர்கள் செய்வதில்லை; சிந்திக்கின்ற மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்கின்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் இந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்குள்ளும் மனஉறுதி, விடாமுயற்சி, சரிவிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய மனப்பான்மைகளை உருவாக்குகின்ற வழிகாட்டிகளாக இவர்கள் இருக்கின்றனர். இன்டராக்டிவ் முறையிலான மற்றும் மாணவர்களை மையமாக கொண்ட கற்றல் சூழல் என்ற இலக்கை நோக்கிய ஒரு நிலைமாற்றத்தை தூண்டுவதாகவும் இந்த ஐஐடி ஆசிரியர்களது செயலிருப்பு இருக்கிறது. கல்வியில் தரத்தின் புதிய தரநிலைகளை ஐஐடியில் கற்ற ஆசிரியர்கள் நிறுவுவார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தில் புத்தாக்குனர்கள் மற்றும் தலைவர்களின் அடுத்த தலைமுறையை இதன் மூலம் அவர்கள் தயார் செய்வார்கள்.” என்று குறிப்பிட்டார்.
ஐஐடியின் ஒரு முன்னாள் மாணவராகவும் இருக்கும் ஷ்லாக் கூறியதாவது: “கற்பிக்கும் பாடங்களில் ஆழமான அறிவு தவிர, கற்பித்தலில் ஒரு தனித்துவ தன்மையையும் ஐஐடி முன்னாள் மாணவர்கள் கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சிக்கு முழுமையளிக்கும் கலாச்சாரத்தோடு ஒரு தீவிரமான கல்விசார் சூழலில் கற்றிருக்கும் அவர்களது அனுபவம், மாணவர்களின் அறிவுக்கான ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்கான ஆர்வத்தையும், நேசத்தையும் உருவாக்க உதவுகிறது. ஒரு ஆசிரியராக பாட / கோட்பாடு ரீதியிலான புரிதலுக்கும் மற்றும் நடைமுறை யதார்த்த பயன்பாடுகளுக்கும் இடையிலுள்ள இடைவெளியை ஐஐடி மாணவர்களால் நிரப்ப முடியும்; STEM கற்றலை இன்னும் அதிக ஆர்வமுள்ளதாகவும் மற்றும் பொருத்தமானதாகவும் ஆக்குவதில் இவர்களின் பங்கு சிறப்பானதாக இருக்கும்.”
OCFP திட்டத்தோடு ஆர்க்கிட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், வகுப்பறைக்கு வெளியே பயனுள்ள செயல்பாடுகளின் மூலம் சேம்பியன்களை உருவாக்கும் அதன் முழுமையான அணுகுமுறை மீதும் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கிறது. மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்ற இளம் திறமைசாலிகளை உருவாக்க இந்த பள்ளிகள் சங்கிலித்தொடர் குழுமத்திற்கு அதிக ஊக்கமும், ஆர்வமும் வழங்கியிருக்கின்ற ஒரு மிகப்புதுமையான முன்னெடுப்பாக OCFP திட்டம் இருக்கிறது.