தங்கலான் திரை விமர்சனம்

1850-ம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்துவருகிறார் தங்கலான் (விக்ரம்). சட்டங்களைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி மக்களின் நிலங்களை அபகரித்து, அவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் மிராசுதார் (முத்துக்குமார்), தங்கலானின் நிலத்தையும் அபகரிக்கிறார்.

மைசூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கோலாரில் தங்கத்தை வெட்டி எடுக்கும் வேலைக்கு அழைக்கிறார் ஆங்கிலேயர் கிளிமெண்ட் (டேனியல் கால்டகிரோன்). அந்தப் பகுதியை ஆரத்தி (மாளவிகா மோகனன்) எனும் வனதேவதை காப்பதாகவும் தங்கம் எடுக்க முயல்கிறவர்களை அமானுஷ்ய சக்திகள் மூலம் அழித்துவிடுவாள் என்றும் மக்கள் நம்புகிறார்கள். அடிமையாகக் கிடப்பதைவிட தங்கம் எடுப்பதில் கிடைக்கும் தங்கத்தில் பங்கு கொடுப்பதாக கூறுகிறார் (டேனியல் கால்டகிரோன்) அந்த வருவாயில் நிலத்தை மீட்டு மரியாதையுடன் வாழலாம் என்ற கனவுடன் தங்கலான், மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு செல்கிறார் தங்கம் கிடைத்ததா ? தங்கலானின் மக்களுக்கு விடுதலை கிடைத்ததடா ?தங்கலான் யார் ? போன்ற கேள்விக்கி பதில் பதில் தான் இந்த தங்கலான் திரைப்படம் .