பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்…..?

பா ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை வானம் உள்ளிட்டவைகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பா ரஞ்சித் தனக்கு கிடைக்கும் மேடைகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கத்தை பற்றிபேசியுள்ளார். இவ்வாறு இருக்கும் சூழலில் ஆம்ஸ்ட்ராங் தொண்டர்கள் பலர் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக பா. ரஞ்சித் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி பா. ரஞ்சித்-திற்கு நெருங்கிய தொடர்பான எழுத்தாளர் பிரபா, எந்த ஒரு வன்முறையுமின்றி நல்லடக்கம் செய்தது முதல் அனைத்திற்கும் வழிகாட்டியாய் தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ காட்டியுள்ளாய், ஒரு கூட்டத்தின் தலைவன் இல்லையென்றால் அந்தக் கூட்டமே இல்லாமல் போகாது, முன்பை விட சக்தி வாய்ந்த கூட்டமாக மாறும் என்ற பாணியில் பா.ரஞ்சித்தை குறித்து கூறி பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கையில் அடுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பா.ரஞ்சித் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.