கல்கி திரை விமர்சனம்

கல்கி படத்தின் கதை தொடக்கத்தில் மகாபாரதப் போரில் கெளரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து போரிடுகிறார் த்ரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமா அந்த போரில் பாண்டவர்கள் அனைவரும் கொள்ளப்படுகின்றனர் பாண்டவர்களின் இறுதி வாரிசு கருவில் இருக்க உயிரை . அஸ்வத்தாமா மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த (வாரிசு )குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார். கோபமடைந்த கிருஷ்ணன் அஸ்வத்தாமாவுக்கு சாகாவரத்தை தண்டனையாக வழங்குகிறார். கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும்போது அஸ்வத்தாமா காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து அஸ்வத்தா மீள முடியும் என்பது மகாராபாரத மற்றும் கல்கி படத்தின் திரை கதை தொடக்கம் .

கல்கி திரை படத்தின் கதை ஆங்கிலப்படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளேக்‌ஷ் உலகம் அத்தனை பிரமாண்டம், அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், கிளைமேக்ஸில் புஜு ஒரு கொரில்லா ரோபோட் போல் மாறுவது, மேட் மேக்ஸ் டைப்பில் இரண்டாம் பாதியில் வந்த சேஸிங் என அனைத்து திரையில் மிக பெரிய பிரமாண்டத்தை கொடுத்து ரசிக்கவைத்துள்ளது .

கல்கி திரை படத்தின் கதை உலகத்தின் முதலும் கடைசியுமான நகரமாக மிஞ்சியிருக்கிறது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன் ) கொடுங்கோள் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். ஒருபக்கம் கங்கை நதி வற்றி பஞ்சத்திலும் பசியிலும் வாழ்கிறார்கள் மக்கள். மறுபக்கம் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான “காம்பிளக்ஸ்” என்கிற தங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் தனி உலகில் வாழ்கிறார்கள். எப்படியாவது இந்த காம்பிளக்ஸிற்குள் தேவையான பணத்தை சேர்த்து தானும் செல்வம் படைத்த மக்களுடன் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் ( பிரபாஸ்) ஒரே கனவு.

சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கியாக பிறக்க இருக்கும் குழந்தைதான். இந்தக் குழந்தையை சுமக்கிறார் சுமதி ( தீபிகா படுகோன்). எப்படியாவது இந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார் யாஸ்கின். அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). இந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் வழியாக தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் பைரவா இவர்கள் கனவு கனவு நிறைவேறியதா ? அஸ்வத்தமா தனது சாபத்தில் இருந்து மீண்டாரா? சுப்ரீம் யாஸ்கினின் பிராஜெக்ட் கே திட்டம் என்ன ? பைரவா தனது ஆசையை நிறைவேற்றினாரா என்பதே கல்கி படத்தின் கதை.

கல்கி படத்தின் முதல் பாகத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் மனதின் பதியும்படியான கதாபாத்திரம் என்றால் அமிதாப் பச்சன் நடித்துள்ள அஸ்வத்தாமாவையும் மற்றும் கமலின் யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு தலையே முதன்மையானதாக இருக்கிறது. அதில் வெறும் இரண்டு கண்களையும் குரலையும் வைத்தே திரையில் ரசிக வைத்துள்ளார் . இரண்டாம் பாதியில் யாஸ்கின் மிரளவைபார்.

கல்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அதிநவீனமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கதாபாத்திரங்கள் அமைத்துள்ளது , மறுபுறம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகளை கொண்டு அறிவியலையும் கற்பனையையும் இணைத்து திரையில் ரசிக வைத்துள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின் தனிச்சிறப்பு.

படத்தின் மொத்த உணர்ச்சியையும் தாங்கிச் செல்லக்கூடிய கதாபாத்திரம் தீபிகா படுகொன் நடித்துள்ள சுமதி. ஆனால் இதில் நடிப்பிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாதது வருத்தமே. அதேபோல் ஷோபனா, பசுபதி, அனா பென் ஆகியவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.

பிரபாஸ் ஓட்டும் வாகனமான புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் , மிருணால் தாக்கூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமெளலி என படத்தில் சின்ன சின்னதாக நிறைய சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் டுடோல்விக் ஒளிப்பதிவு திரையில் ரசிக்கும்படி உள்ளது,
சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக அமைத்து ரசிக வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.