அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ். அதை ஜெகதீஷின் முகத்தை வைத்து நேராகக் கதை சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்துக் கதை சொன்னால் எப்படியிருக்கும் என்கிற தனித்துவமான முயற்சியே ‘பயமறியா பிரம்மை’ படத்தின் கதை..
ஜெகதீஷாக வரும் ஜேடி-யும், கபிலனாக வரும் வினோத் சாகரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா, ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ,மாறனாக வரும் ஏ.கே., ஜான் விஜய் ஆகியோரின் திரையில் பங்களிப்பு மிக சிறப்பு .
கபிலனின் விருதுபெற்ற ‘உச்சி முகடு’ என்கிற நாவலைச் சந்திப்புக்கு முன் வாசித்து முடித்திருக்கும் ஜெகதீஷ், ‘அது நீட்டி முழக்கப்பட்ட வெற்றுக் காகிதம்’ என்கிறான். தான் கொலைகளைச் செய்த விதமே சிறந்த படைப்பு; தானே சிறந்த கலைஞன் எனக் கூறுகிறான். ‘சக மனிதர்களைக் கொல்வது கலையாக முடியாது’ என கபிலன் மறுக்க, ஜெகதீஷ், கபிலனின் வாதத்தை எதிர்கொண்டு தகர்க்க முயல்கிறான். இருவருக்குமான மோதலில் இருந்து தொடங்கும் படம் மிக சிறப்பு,