அச்சாரம் ரெடி?.. சந்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே.. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் கேசிஆர்!
1996 பிளான்.. சந்திரசேகர ராவ் அதிரடி மூவ் பின்னணி…
சென்னை: 3-வது அணிக்கான வேலைகளில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மும்முரமாகியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் முக ஸ்டாலினை இன்று மாலை அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் கொஞ்ச நாளில் நாடாளுமன்ற தேர்தல் முடியப் இருப்பதால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை (கொள்கை, கோட்பாடுகள், மக்கள் விருப்பம், மக்கள் தீர்ப்பு ஆகியவற்றை தூக்கி குப்பையில் போட்டு விட்டு) எல்லா கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன.
தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக, காங்கிரஸ் என இந்த இரண்டு கட்சியுமே இல்லாத ஒரு 3-வது அணியை அமைக்க புது வியூகம் அமைக்க தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்
சந்திப்பு
பினராயி விஜயன்
இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றோருடன் சந்திப்பு என தீவிரம் காட்டி வருகிறார்.
இன்று மாலை
சந்தேகங்கள்
அப்படித்தான் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க முடிவு செய்தார். அதற்காக இன்றைய தினம் அதாவது 13-ம் தேதி சந்தித்து பேச நேரமும் கேட்டிருந்தார். இந்த பேச்சு வந்தபோதே பல்வேறு சந்தேகங்களும், யூகங்களும் எழுந்தன.
ராகுல்காந்தி
சலசலப்புகள்
ராகுல் காந்திதான் பிரதமர் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் முந்திக் கொண்டு சொன்னவர் முக ஸ்டாலின்தான்! அப்படி இருக்கும்போது, சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டது பெரும் சலசலப்புகளையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் அணி தாவுகிறாரா என்ற பேச்சும் கிளம்பியது.
கேசிஆர்
ஆழ்வார்பேட்டை
இதன் காரணமாக ஸ்டாலின், கேசிஆரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இருவரும் இன்று சந்திக்கப் போகிறார்கள். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு கேசிஆர் வருகிறார். ஸ்டாலினை சந்திக்கிறார். பேசுகிறார். 3வது அணி குறித்தும் விவாதிக்கிறார். நிச்சயம் இது இதயப்பூர்வமான சந்திப்பாகத்தான் இருக்கும். ஆனால் இதனால் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுக்கு இனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி.
நிலைப்பாடு
திருமாவளவன்
ஸ்டாலின் காங்கிரஸ் ஆதரவு என்ற தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளாரா? அல்லது இது வெறும் மரியாதைக்குரிய சந்திப்புதானா என்று தெரியவில்லை. அப்படியே தன் முடிவில் மாற்றம் என்றால், கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றோரை எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை. ஏனெனில் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி வரவேண்டும் என்று உறுதியாக இருப்பவர் திருமாவளவன், வைகோ, இடதுசாரிகள், காங்கிரசார்!
ஸ்டாலின்
என்ன பேசபோகிறார்?
அதனால் ஸ்டாலின் என்ன பேசபோகிறார், சந்திரசேகராவ் 3-வது அணிக்கு ஆதரவு தரபோகிறாரா? இல்லை என சொல்லி திருப்பி அனுப்பபோகிறாரா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது… திமுக, காங்கிரஸுடன் மட்டும் தொடர்பில் இல்லை.. எல்லா கட்சிகளுடனும் தொடர்பில்தான் உள்ளது!