அடுத்த 2 நாளைக்கு இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வடகடலோர மாவட்டங்களை வெயில் வச்சு செய்யும்
சென்னை: தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதேநேரம் வட கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி பின்னரே தமிழகத்தின் சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு, தேனி, திண்டுக்கல, நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது. அதேநேரம் . மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழை பெய்யாத இடங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 7 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. தேனி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டரும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டிமீட்டர் மழையும் பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.