இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அதாவது திருமணத்திற்கு முன் மாமியார் எப்படி பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து டூர் போகிறார்கள். டூர் போன இடத்தில் நதியாவும், இவானாவும் நட்டநடு காட்டில் தொலைந்துபோக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கலகலப்பாக நகைச்சுவையுடன் டிரைலர் வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.
நான்கு மொழியில்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எல்.ஜி.எம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.