Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

Posted on July 12, 2023July 12, 2023 By admin

சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் உருவாகியுள்ள கிடா (Goat)  திரைப்படம். வாழ்வியலை அழகாகச் சொல்லும்  ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,

சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம்,  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 to 20 வரை  நடக்கும் 14th Indian film festival of Melbourne என்ற திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல  திரைப்பட விழாக்களில்,  இப்படத்திற்கு  உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
உலகம் முழுக்கவுள்ள திரை ரசிகர்களைக் கவர்ந்துள்ள இப்படம், தமிழக ரசிகர்களைக் கவரும் வகையில் விரைவில் திரைக்குவரவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் :  ஏகாதசி
எடிட்டர்  : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு  : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்
தயாரிப்பாளர் : ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா
இயக்கம்  : ரா. வெங்கட்

Cinema News Tags:“கிடா”  திரைப்படம்!!, மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில்

Post navigation

Previous Post: SRK’s Jawan Prevue Shatters all previous records! As the video with the highest views ever in 24 hrs for any Indian Film
Next Post: டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது

Related Posts

கவுச்சி கன்னி நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு-indiastarsnow.com கவர்ச்சி கன்னி நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு Cinema News
பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில் பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில் Cinema News
ஒண்ணரை மொழி மட்டுமே எனக்கு தெரியும் ; அங்காரகன் விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் ; அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு Cinema News
genelia-indiastarnsow.com நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து !!!!!!! Cinema News
Akku Movie Review ஃ (அக்கு) திரை விமர்சனம் Cinema News
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme